தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச்செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், மருத்துவ வல்லுநர்கள், சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதனைத்தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரானா தாக்கம் குறைந்த மாவட்டங்களில் பேருந்துகள் இயக்குவது நீண்ட தூர பேருந்துகள் இயக்கம், சிறிய அளவிலான ஜவுளிக்கடைகளை திறப்பது மேலும் சில தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.