சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து 23 மாவட்டங்களில் மாவட்ட மற்றும் உள்மாவட்ட போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் முறையே அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகும்.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
எனினும் சினிமா திரையரங்குகள் திறக்க அனுமதியில்லை. அதேபோல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் திருவிழாக்கள் உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை.
இதையும் படிங்க: கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!