ETV Bharat / city

”எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கையை உடனே தொடங்குங்கள்” - அன்புமணி இராமதாஸ்

author img

By

Published : Jun 27, 2022, 2:17 PM IST

எல்கேஜி, யுகேஜி வகுப்பு மாணவர் சேர்க்கையை தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

எல்கேஜி யுகேஜி மாணவர் சேர்க்கையை உடனே தொடங்குங்கள்

தமிழ்நாட்டில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. இதனால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ள நிலையில், இந்த முக்கியமான விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டுவது மிகவும் கவலையளிக்கிறது.

மழலையர் வகுப்புகள் மூடல்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2381 அரசு பள்ளிகளில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாக ஜூன் மாதத் தொடக்கத்தில் தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறை அறிவித்தது.

அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மழலையர் வகுப்புகள் அரசு பள்ளிகளுக்கு மாற்றாக அங்கன்வாடிகளில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். ஆனால், அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படாது என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.

மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை

அதைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், அதற்காக 2,500 சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் கடந்த 9ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அதன்பின் 19 நாட்களாகி விட்ட நிலையில், 2381 அரசு பள்ளிகளில் ஒன்றில் கூட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு இன்னும் மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை.

பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 13-ஆம் தேதி அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர் இரு வாரங்களாகியும் மழலையர் வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகள் நடத்தப்படாத நிலையில் நடப்பாண்டில் மழலையர் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பல்லாயிரக்கணக்கான பெற்றோர் அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கின்றனர்.

இரு வாரங்கள் கழித்து வாருங்கள் : ஆனால், மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அவர்களுக்கு எந்த விளக்கமும் கிடைப்பதில்லை. மாறாக, ‘‘இரு வாரங்கள் கழித்து வாருங்கள்’’ என்ற பதில் மட்டுமே கிடைக்கிறது. ஆங்கிலமயமாக்கப்பட்ட கல்விச் சூழலில் தங்கள் பிள்ளைகள் மழலையர் வகுப்புகளில் பயில வேண்டும் என்பது பெற்றோர்களின் கனவாக உள்ளது.

ஆனால், அனைத்து பெற்றோர்களுக்கும் தங்களின் பிள்ளைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் படிக்க வைக்கும் அளவுக்கு வசதி இல்லை. அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு அரசு பள்ளிகளில் நடத்தப்படும் மழலையர் வகுப்புகள் தான் வரப்பிரசாதமாக அமைந்திருந்தன. தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பல மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து வகுப்புகளும் தொடங்கி விட்டன.

ஆனால், அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பது கூட தெரியாததால் பெற்றோர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்த கவலையில் அவர்கள் ஆழ்ந்துள்ளனர். அதேபோல், மழலையர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளும் இன்னும் தொடங்கப்படவில்லை.

மாணவர் சேர்க்கையை உடனே தொடங்குங்கள் : ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகு தான் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை மழலையர்களின் கல்வி உரிமை பறிக்கப்படக் கூடாது. ஏற்கனவே, மழலையர்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களைக் கொண்டு மழலையர் வகுப்புகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.

குழந்தைகளின் கற்றல் திறன் 3 வயதில் சிறப்பாக இருக்கும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் அந்தப் பருவத்தில் அவர்களுக்கு முறைச்சார்ந்த கல்வி வழங்குவது அவசியம் ஆகும். இதை உணர்ந்து அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஒரு வாரத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து, அடுத்த வாரம் முதல் வகுப்புகளைத் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: video - ஈபிஎஸ் ஆதரவாளர்களால் பேனரில் இருந்து கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் முகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.