புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி மதுக்கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சுற்றுலா பிரிவிற்குரிய பார்கள் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜுன்.8) மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
வழக்கமாக ஒரு நாளில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் மூன்று முதல் நான்கு கோடி வரை மது விற்பனை நடைபெறும். ஆனால், நேற்று முன்தினம் (ஜுன்.8) ஒரே நாளில் ரூ. 7 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, மது விற்பனைத் தொடங்கி இரண்டாம் நாளான நேற்றும் மதுவாங்க கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க : உலக பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பிடித்த இந்திய கல்வி நிறுவனங்களுக்குப் பாராட்டு!