ETV Bharat / city

'இது தேர்வல்ல வீட்டுப்பாடம்' - ஆன்லைன் தேர்வை எதிர்த்து யுஜிசிக்கு கடிதம்

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும்ஆன்லைன் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் டி.பி.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வு முறைக்கு எதிர்ப்பு

author img

By

Published : Jul 9, 2021, 7:47 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு முறையினை பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது மாணவர்களின் செயல்பாடுகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டன.

இதனால் தேர்வினை எழுதிய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை நடத்தினர்.

மூன்று மணி நேரம் தேர்வு

அதன் பின்னர் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறும்போது, கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் கரோனா தொற்றின் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் மாணவர்கள், அதிகளவில் பாதிக்கப்படுள்ளதாக தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் பிற பல்கலைக்கழங்கங்களில் நடத்தப்பட்டதுபோல், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஏப்ரல், மே மாதங்கள் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் 3 மணி நேரம் பேப்பர், பேனாவை பயன்படுத்தி கரோனா தொற்று குறைந்தப் பின்னர் எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார். அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பேப்பர், பேனாவை பயன்படுத்தி ஆன்லைனில் வினாக்கள் அனுப்பி 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது.

யூஜிசிக்கு முன்னாள் துணைவேந்தர் கடிதம்

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் டி.பி.சிங்கிற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் வழக்கமான வினாத்தாள் முறையைப் பயன்படுத்தி 3 மணிநேரத்திற்கு செமஸ்டர் தேர்வுகளை (இறுதி செமஸ்டர் உட்பட) ஆன்லைன் முறையில் நடத்துமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பின்வரும் நடைமுறையைப் பயன்படுத்தி பாதுகாப்பில்லாத ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகின்றன.

தேர்வுக்கான வினாத்தாள்களை மாணவர்கள் பதிவிறக்கும் செய்வதற்காக ஒரு மணி நேரம் முன்னதாக அனுப்பப்படுகிறது. மாணவர்கள் வினாத்தாள்களை வீடுகள் அல்லது வேறு இடங்களில் பதிவிறக்கம் செய்கின்றனர்.

விடைகளை ஏ4 தாளில் எழுவதற்கு 3 மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களை அன்றோ அல்லது மறுநாளோ அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதும் நேரத்தை கண்காணிக்க எந்தவிதமான மேற்பார்வையும் கிடையாது.

இது தேர்வல்ல வீட்டுப் பாடம்

தேர்வின்போது மாணவர்கள் புத்தகங்களை பார்த்து எழுதவும், ஆன்லைனில் தேடியும், ஸ்மார்ட் போன்கள் மூலம் நண்பர்களிடம் இருந்து பதில்களை கேட்டு பெற்றும், ஆள்மாறாட்டம் செய்தும் எழுதும் வகையில் உள்ளது. எனவே இந்தத் தேர்வினை ‘வீட்டு பாடம் என அழைக்கலாம்.

மாணவர்களுக்கு நேரடியாக நடைபெறும் தேர்வின்போது கண்காணித்தாலும், முறைகேட்டில் ஈடுபடுகின்றனர் என்பதை அனைவரும் அறிவோம். தேர்வு முறைகளால் மாணவர்களின் கல்வி அறிவின் உயர்வையும், குறைவையும் காட்டுவதாக அமைய வேண்டும்.

சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு

ஆனால் தற்பொழுது நடைபெறும் முறையால் அதனை அறிய முடியாது. இந்தத் தேர்வு முறையினால் பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன், சிறப்பாக படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்பையும் பாதிக்கும். மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பல்கலைக்கழக மானியக்குழு உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு என்ன தேர்வுமுறைகளை பயன்படுத்தப்போகிறது.
ஆன்லைன் தேர்வு முறை என்பது கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் போன்றவற்றை பயன்படுத்தி பேப்பர் மற்றும் பேனா இல்லாமல் பாதுகாப்புடன் நடத்துவதாகும்.

அரசு பல்கலைக்கழகங்களில் அரசியல்வாதிகளின் அழுத்தம்
கழகம் சமீபத்தில் நடத்திய ஆன்லைன் தேர்வின்போது செயற்கை நுண்ணறிவு முறையை பயன்படுத்தி பாதுகாப்புடன் சிறப்பாக நடத்தியது. ஆனால் அந்த தேர்வினை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ரத்து செய்து, மீண்டும் தேர்வினை கண்காணிப்பில்லாத ஆன்லைன் முறையில் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அரசு பல்கலைக்கழகங்கள் அரசியல்வாதிகளின் அழுத்தத்தின் காரணமாக தேர்வில் தோல்வி அடைந்த 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாஸ் மதிப்பெண்கள் வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. எனவே பல்கலைக்கழக மானியக்குழு பாதுகாப்பான ஆன்லைன் தேர்வினை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.