ETV Bharat / city

வழக்கறிஞர் தொழிலுக்கு ஆங்கிலப் புலமை முக்கியம் - உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் - வழக்கறிஞர்

சென்னை: வழக்கறிஞர் தொழிலுக்கு ஆங்கிலம் முக்கியம் என்பதால் ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், புதிய வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ramasubramanian
ramasubramanian
author img

By

Published : Feb 1, 2020, 8:37 PM IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில், 409 சட்ட பட்டதாரிகள், வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், தமிழ் மொழியின் மீது பற்று கொள்வது என்பது வேறு மொழிகளை புறக்கணிப்பது அல்ல என்றும், வழக்கறிஞர் தொழிலுக்கு ஆங்கிலம் முக்கியம் என்பதால் ஆங்கிலப் புலமையை வழக்கறிஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

முன்னதாக பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், தமிழகத்தில் போலி வழக்கறிஞர்களைத் தடுக்கும் பணிகளை தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் மேற்கொண்டு வருவதாகவும், இதுபோன்ற போலி வழக்கறிஞர்களால், நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய வழக்குகள் காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்துகள் மூலம் தீர்த்து வைக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார். புதிய வழக்கறிஞர்கள், போலிகளுக்குத் துணை போகாமல் தனித்தன்மையுடன், நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசும்போது, அதிகமான பெண் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும், கீழமை நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளே அதிகம் உள்ளதால், இலக்கை நிர்ணயித்து பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

நீதிபதி கிருபாகரன் பேசும்போது, புதிதாக பதிவுசெய்துள்ள வழக்கறிஞர்கள் திறமையை வளர்த்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், காவல் நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் கார்த்திகேயன், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், பார் கவுன்சில் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: எப்போது தூக்கு? டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

Intro:Body:வழக்கறிஞர் தொழிலுக்கு ஆங்கிலம் முக்கியம் என்பதால் ஆங்கில புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் நீதிபதி ராமசுப்பிரமணியன், புதிய வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில், 409 சட்ட பட்டதாரிகள், வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், தமிழ் மொழியின் மீது பற்று கொள்வது என்பது வேறு மொழிகளை புறக்கணிப்பது அல்ல. வழக்கறிஞர் தொழிலுக்கு ஆங்கிலம் முக்கியம் என்பதால் ஆங்கில புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

புதிய வழக்கறிஞர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுப்பசி தேடுதல் இருக்கவேண்டும் என்றும் கூறி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன், சமீபகாலமாக வழக்கறிஞர்கள் குறித்து பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் குறித்து வருத்தமளிப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் அவர், தமிழகத்தில் போலி வழக்கறிஞர்களைத் தடுக்கும் பணிகளை தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் மேற்கொண்டு வருவதாகவும், இதுபோன்ற போலி வழக்கறிஞர்களால், நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய வழக்குகள் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்துகள் மூலம் தீர்த்து வைக்கப்படுவதாகவும், புதிதாக வழக்கறிஞர்கள், போலிகளுக்குத் துணை போகாமல், தனித்தன்மையுடன், நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, வழக்கறிஞர் என்பவர் சமுகத்தின் பொறியாளர், சமுகத்தின் மருத்துவர் மற்றும் சமுகத்தின் தணிக்கையளர் என்றார். வழக்கின் தன்மை மாறும்போது அவற்றை புதிதாக வரும் வழக்கறிஞர்களால் எளிதாக கையாள முடியும் எனவும், அதிகமான பெண் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும் கீழமை நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளே அதிகம் உள்ளதால், இலக்கை நிர்ணயித்து பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

நீதிபதி கிருபாகரன் பேசும் போது, புதிதாக பதிவுசெய்துள்ள வழக்கறிஞர்கள் திறமையை வளர்த்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் காவல் நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தமிழ் பழமையான மொழியாக இருந்தாலும் சர்வதேச ரீதியான ஆங்கிலம் அவசியம் என்றும் ஆங்கில புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பெற்றோரை கைவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர் வி.கார்த்திகேயன், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், பார் கவுன்சில் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.