சென்னை காவல் ஆணையரிடம் பெண்களை இழிவாக பேசிய ஆ. ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவிகள், "திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் பழனிசாமியின் தாயாரை மிகவும் இழிவாக பேசியது கண்டிக்கத்தக்கது. ஆ. ராசா வழக்கறிஞராக இருந்துகொண்டு சட்டத்திற்கு புறம்பாக பேசிவிட்டு வெறும் மன்னிப்பு மட்டும் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தனர்.
மேலும் ஏற்கனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்திருந்தாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர்கள் கூறினர்.