ETV Bharat / city

சட்டப்படிப்பு மாதிரித் தேர்வு வழிகாட்டுதல்: ஜூலை 15இல் வெளியீடு

author img

By

Published : Jul 13, 2021, 5:19 PM IST

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தில் இளநிலை, முதுநிலை சட்டப்படிப்புகளுக்கான தேர்வினை ஆன்லைன் வழியில் எழுதுவதற்கான மாதிரித் தேர்வு குறித்த வழிகாட்டுதல்கள் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படிப்பு மாதிரித் தேர்வு வழிகாட்டுதல்

இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டப்பள்ளி, இணைவு பெற்ற அனைத்துச் சட்டக்கல்லூரிகளில் வழங்கிவரும் இளநிலை, முதுநிலை சட்டப்படிப்புக்கான தேர்வுகளை 2021 ஜூலை, செப்டம்பர் மாதங்களில் ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தேர்விற்கான கால அட்டவணை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பெயர் பட்டியல், காணொலி வழிகாட்டுதல்களுடன்கூடிய ஆன்லைன் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்கள், மாதிரித் தேர்வு தொடர்பான தகவல்கள் ஜூலை 15ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் http://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் இது குறித்து விளக்கம் பெறுவதற்கு பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர்களை தொடர்புகொள்ளலாம்" எனக் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.