சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர். .
அப்போது சார்ஜாவிலிருந்து சென்னைக்கு வந்த கடலூரைச் சேர்ந்த பார்த்திபன்(23) என்ற பயணியிடம் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்துள்ளனர். அப்போது முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் தங்கச் சங்கிலி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடமிருந்து ரூ.7 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்புள்ள, 190 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.
கடத்தல் தங்கம் பறிமுதல் செய்த அலுவலர்கள்!
அதேபோல் கொழும்புவிலிருந்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜபரூல்லா(30) என்பவரை சோதனை செய்தபோது, ரூ.7 லட்சத்து, 70ஆயிரம் மதிப்புள்ள 195 கிராம் தங்கத்தை மறைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பேரிடமிருந்து மொத்தம் ரூ.15 லட்சத்து, 20ஆயிரம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள், யாருக்காக கடத்தி வந்தனர்? என்று விசாரித்து வருகின்றனர்.
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்