ETV Bharat / city

வண்டலூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்; 50 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! - வேலைவாய்ப்பு முகாம்

வண்டலூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Employment Camp Started by Stalin  Employment Camp by stalin  Employment Camp in chengalpattu  stalin provide job  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  செங்கல்பட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  வேலைவாய்ப்பு முகாம்  வேலைவாய்ப்பு முகாம் ஸ்டாலில் தொடங்கி வைப்பு
வேலைவாய்ப்பு முகாம்
author img

By

Published : Mar 20, 2022, 1:26 PM IST

செங்கல்பட்டு: வண்டலூரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, இம்முகாமில் வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 20) வழங்கினார்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் பிற மாவட்ட இளைஞர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றனர்.

இந்நிறுவனங்களால் 73 ஆயிரத்து 950 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 20 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Employment Camp Started by Stalin  Employment Camp by stalin  Employment Camp in chengalpattu  stalin provide job  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  செங்கல்பட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  வேலைவாய்ப்பு முகாம்  வேலைவாய்ப்பு முகாம் ஸ்டாலில் தொடங்கி வைப்பு
வேலைவாய்ப்பு முகாம்

இம்முகாம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ஒருங்கிணைப்புடன் உணவு, குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் நடத்தப்பட்டது. அத்துடன் மகளிர் திட்டத்தின் கீழ் சுயஉதவி குழு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், திறன் பயிற்சி மேற்கொள்வதற்கான பதிவுகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாகவும், அயல்நாட்டு வேலைக்கான பதிவுகள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாகவும், தொழிற் பழகுநர் பயிற்சிக்காக பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பயிற்சி பிரிவின் வாயிலாகவும் மேற்கொள்வதற்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

பணி நியமனம் ஆணை வழங்கிய ஸ்டாலின்

இத்துடன், தொழில் நெறி வழிகாட்டல் வழங்குவதற்கென, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினால் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. மே 2021 முதல் இதுவரை 36 பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், 297 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

இதில் 5 ஆயிரத்து 708 நிறுவனங்களும், 2 லட்சத்து 50 ஆயிரத்து 516 வேலைநாடுநர்களும் பங்கேற்றதில் 41 ஆயிரத்து 213 வேலைநாடுநர்கள் பல்வேறு துறைகளில் பணிநியமனம் பெற்றுள்ளனர். இதில் 517 மாற்றுதிறனாளிகளும் அடங்குவர்.

தமிழ்நாடு முதலமைச்சர் விழா மேடையில், கல்வித் தொலைக்காட்சி மூலமாக அரசுப் பணிகளுக்காக பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சிக்கான ஒளிபரப்பினை தொடங்கி வைத்தார்.

இப்பயிற்சி வகுப்பு அன்றாடம் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், அதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் ஒளிபரப்படும்.

இதையும் படிங்க: மீண்டும் திறக்கப்படும் தலைஞாயிறு சர்க்கரை ஆலை - பட்ஜெட்டில் அறிவிப்பு; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.