இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் முதல் தொற்று கண்டறியப்பட்டு முதல் அலையின் காரணமாக கடுமையான பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளானர்கள். முன்னறிவிப்பின்றி பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதார பேரழிவை நாடு சந்தித்தது.
தனியார் கைவசம் தடுப்பூசி:
முதல் அலையில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இரண்டாவது அலையை எதிர்கொள்கிற தொலைநோக்கு திட்டங்களை பிரதமர் மோடி அறிவிக்கவில்லை. கடந்த காலத்தைப்போல் தடுப்பூசி உற்பத்தியை பொதுத்துறை நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் சீரம், பயோடெக் ஆகிய தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து அவற்றின் உற்பத்தியை நம்பி இருக்கிற அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
பலி எண்ணிக்கையில் இந்தியா 3ஆவது இடம்:
இந்நிலையில் கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டிவிட்டது. நாள்தோறும் 4 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா 3ஆவது இடத்தை எட்டி உள்ளது.
இதுவரை மத்திய அரசு 21 கோடி தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கி உள்ளது. இதன் மூலம் 18 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 22.4 விழுக்காட்டினருக்கு மட்டும் தான் அதுவும் ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்க முடியும். இதுவரை 4.5 விழுக்காட்டினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் சராசரியாக 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மே மாதம் நாளொன்றுக்கு இதுவரை 18 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதன்படி பார்த்தால் 5 கோடி பேருக்குதான் தடுப்பூசி செலுத்த முடியும்.
மீதமுள்ள 40 ஆயிரம் கோடியை ஒதுக்குங்கள்:
இந்தியா மக்கள்தொகை 135 கோடி. இதில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 94 கோடி பேர். இவர்களுக்கு மொத்த தடுப்பூசி தேவை 188 கோடி. ஆனால் கோவிஷூல்டு தடுப்பூசியில் 6 கோடியும், கோவாக்சினில் 2 கோடியும் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மூன்றரை ஆண்டுகள் ஆகும் என மருத்தவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை பிரதமர் அறிவிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி செலுத்த 75 ஆயிரம் கோடி தேவைப்படும். ஏற்கனவே 35 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது. உடனே மீதமுள்ள 40 ஆயிரம் கோடியை உடனே ஒதுக்க வேண்டும். அந்த பொறுப்பை தட்டிகழித்து மாநிலங்கள் தலையில் கட்டினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி