ETV Bharat / city

கரோனா பரவும் மையமாகும் கோயம்பேடு சந்தை - நடவடிக்கை கோரி வழக்கு!

சென்னை: கோயம்பேடு காய்கனி சந்தையில் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

market
market
author img

By

Published : Apr 17, 2020, 4:54 PM IST

கெருகம்பாக்கம் சுற்றுவட்டார வியாபாரிகள் நலச்சங்க துணைத் தலைவர் ஜெயசீலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மளிகை, காய்கறி, பழம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்டும். இந்த நடைமுறையை வாடிக்கையாளர்கள் கடைபிடிக்கவில்லை என்றால், கடைகளின் உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்துகின்றனர். வருவாய்த் துறையினர் கடைக்கு சீல் வைக்கின்றனர்.

எனவே, சிறுகடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் என்.சி.சி, என்.எஸ்.எஸ். மாணவர்களையும், தன்னார்வலர்களையும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்ய சிறு வியாபாரிகள் செல்லும்போது, காவல் துறையினர் தொந்தரவு ஏற்படுகிறது.

அதனால், சிறு வியாபாரிகளுக்கு தனியாக அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்குவதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், கோயம்பேடு சந்தை கரோனா வைரஸ் தொற்று பரவும் மையமாக திகழ்கிறது. காய்கறி, பழங்கள், பூக்கள் வாங்க வியாபாரிகள் மட்டுமல்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் வைரஸ் தடுப்பு நடைமுறைகள் எதையும் முறையாக பின்பற்றுவது இல்லை. முகக்கவசம், கையுறை பயன்படுத்துவது இல்லை. நெருக்கமாக நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

எனவே, கோயம்பேடு சந்தையில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ஊரடங்கு உத்தரவினால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் தொழில் கடன்களுக்கு 3 மாத வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர், மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மன அழுத்த பாதிப்பு: அழைப்புதவி எண்ணை அறிமுகப்படுத்திய சென்னை மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.