ETV Bharat / city

நிவாரணம் கேட்கும் கோயம்பேடு வியாபாரிகள் - அரசு பதிலளிக்க ஆணை!

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையின் 1,256 சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிய மனுவுக்கு, அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

market
market
author img

By

Published : Nov 26, 2020, 7:12 PM IST

ஊரடங்கால் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு, திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அங்கு 196 கடைகளுக்கு மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டன. சிறு வியாபாரிகளுக்கு கடைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, கோயம்பேடு சந்தை கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மொத்த காய்கறி விற்பனையை தவிர, சிறிய கடைகளைத் திறப்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதனால் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள கோயம்பேடு காய்கறி சந்தை சிறு வியாபாரிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் உஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, ஜனவரி 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

இதையும் படிங்க: புயலுக்கு பின்னே கரோனா! - ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.