ETV Bharat / city

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சசிகலாவிடம் விசாரணை - Kodanad murder and robbery case police Inquiry Sasikala

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் ஐஜி சுதாகரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது!- ஐஜி சுதாகரனின் தனிப்படை விசாரிக்கிறது

author img

By

Published : Apr 21, 2022, 12:04 PM IST

Updated : Apr 21, 2022, 12:12 PM IST

சென்னை: கோட நாடு கொலை கொள்ளை விவகாரம் தொடர்பாக வி.கே சசிகலாவிடம் இன்று விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சசிகலாவின் தியாகராய இல்லத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. ஐஜி சுதாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் விசாரணை நடத்துகின்றனர்.

சசிகலாவிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் தி நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே கோட நாடு கொலை,கொள்ளை வழக்கில் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில், இன்று சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி என்பதால் , கோட நாடு பங்களாவில் இருந்த நில பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர் தலைமையிலான நீலகிரி மாவட்ட காவல்துறை எஸ்பி ஆஷிஷ் ராவத், காவல்துறை ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சசிகலாவிடம் விசாரணை

இதையும் படிங்க:கோடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு சசிகலா ஒத்துழைப்பு அளிப்பார் - டிடிவி தினகரன்

Last Updated : Apr 21, 2022, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.