சென்னை, செனாய் நகர், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). இவர் இந்து திருக்கோயில் கூட்டமைப்பு ஒன்றை ஆரம்பித்து அதன் பொதுச்செயலராக விளங்கி வருகிறார்.
இவரது அலுவலகம் இவர் வீட்டின் கீழ்தளத்திலேயே அமைந்துள்ளது. இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று (மார்ச். 10) மாலை ஏழு மணியளவில் அலுவலகத்தில் இருந்துள்ளார். அப்போது திடீரென்று ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியுடன் அவரது வீட்டிற்குள் புகுந்து சதீஷ்குமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் தந்தை அமைந்தகரை காவல் துறையில் புகாரளித்துள்ளார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடிவருகின்றனர்.