திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, விவசாயிகள், தொழில்முனைவோர், சுய உதவிக்குழுக்கள் போன்றோருடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், ”திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரம்பத்தில் அதிகமாக இருந்த கரோனா பாதிப்பு, படிப்படியாகக் குறைந்துவருகிறது. சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டம் என்பதால் இங்கு தொற்று பாதிப்பு அதிகமாகவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 82% குடிமராமத்துப் பணிகள் முடிக்கப்பட்டு, ஏரிகளில் 50% நீர் நிரம்பியுள்ளது. புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை நீர்தேக்கப்பணிகள் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவருகின்றன. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகளும் நடந்துவருகின்றன “ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர், கிசான் திட்டத்தில் மத்திய அரசு அதிக சலுகைகள் அளித்ததால், அதைத் தவறாக சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: மணல் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல்செய்த நிறுவனம்: அரசிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை