ETV Bharat / city

சிறுமியை கடத்தி மணமுடித்து சித்தரவதை செய்த நபருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டணை - போக்சோ நீதிமன்றம்

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததுடன், சித்ரவதை செய்து துன்புறுத்தியவருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

pocso court order
pocso court order
author img

By

Published : Feb 24, 2022, 10:35 AM IST

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கருணாகரன், கடந்த 2015-ம் ஆண்டு, சூளை தட்டான்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து, அயனாவரத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். பின், சிறுமி மீது சந்தேகம் அடைந்து மது போதையில் அடித்து துன்புறுத்தி உள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை சிகரெட்டால் உடலின் பல்வேறு பகுதிகளில் சூடு வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த அவர், கத்தியால் சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கருணாகரன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (போக்சோ) உள்ளிட்ட 6 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னையில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ராஜலட்சுமி, கருணாகரன் மீதான 6 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மொத்தம் 41 ஆண்டுகள் சிறை தண்டனையும், 36 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனையும் (14 ஆண்டுகள்), கடத்தல் குற்றச்சாட்டுக்காக 10 ஆண்டு, கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டு, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனை, கத்தியால் அறுத்து காயப்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஓராண்டு, ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி சூடு வைத்த குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு என மொத்தம் 41 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், அனைத்து தண்டனைகளையும் அனுபவித்த பின்பு கடைசியாக ஆயுள்தண்டனையை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக 7 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு- காருக்குள் இருந்த காவலரை வெளுத்து வாங்கிய கணவர்......

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.