ETV Bharat / city

தமிழ்நாடு முதலமைச்சருடன் பினராயி விஜயன் விரைவில் சந்திப்பு - பினராயி விஜயன்

சென்னை: நதிநீர் பிரச்சனை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விரைவில் சென்னை வந்து தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.

minister
minister
author img

By

Published : Jan 24, 2020, 2:33 PM IST

தமிழ்நாடு வந்திருக்கும் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் கே.சி. கருப்பணன், கன்னியாகுமரியில் 15 கோடி மதிப்பில் விருந்தினர் மாளிகை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார். நதிநீர் பிரச்னைகளில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக கேரள முதலமைச்சர் விரைவில் சென்னை வந்து தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்கவுள்ளதாகவும் கருப்பணன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், கண்ணகி கோயிலுக்கு நல்ல வழிப்பாதை போட்டு அதனை சுற்றுலாத் தலமாக மாற்றக் கோரிக்கைவிடுத்துள்ளதாகத் தெரிவித்தார். அதேபோல தொல்லியல் சார்ந்து மிகப்பெரிய அகழாய்வு முசிறிப்பட்டணத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் கீழடி, முசிறியை ஒப்பிட்டுப் பார்த்து இப்பணிகளை இணைந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக முதல்வருடன் பினராயி விஜயன் விரைவில் சந்திப்பு

கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறும்போது, கண்ணகி கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், அந்தக் கோயிலுக்கு செல்லும் பாதையில் சில பிரச்னைகள் இருப்பதாகவும், அது தொடர்பாக விரைவில் இரு மாநில அமைச்சர்கள் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: கையெழுத்து இயக்கத்தை அறிவித்தது திமுக கூட்டணி!

Intro:Body:https://we.tl/t-R6d7cZc90P

நதிநீர் பிரசனை தொடர்பாக கேரள முதல்வர் விரைவில் சென்னை வந்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்

தமிழகம் வந்திருக்கும் கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜனை சந்தித்து பேசினார். பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், தமிழகத்தில் கன்னியாகுமரியில் 15 கோடி மதிப்பில் விருந்தினர் மாளிகை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு ஒரு மாதத்திற்குள் அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். நதிநீர் பிரச்னையில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் அடுத்தகட்டமாக கேரள முதல்வர் விரைவில் சென்னை வந்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன், கண்ணகி கோவிலுக்கு நல்ல வழிப்பாதை போட்டு அதனை சுற்றுலாத்தளமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். அதே போல தொல்லியல் சார்ந்து மிகப்பெரிய அகழாய்வு முசிறிப் பட்டிணத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கீழடியில் மற்றும் முசிரி ஒப்பிட்டு பார்த்து இணைந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய கேரள சுற்றுலாத்துறை அமைச்சர், கன்னகி கோவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், அந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் சில பிரச்னைகள் இருப்பதாகவும், அது தொடர்பாக விரைவில் இரு மாநில அமைச்சர்கள் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.