கந்தசஷ்டி கவசம் சர்ச்சை குறித்த வழக்கில் கறுப்பர் கூட்டம் இணையதள நிர்வாகிகள் சுரேந்தர், செந்தில் வாசன் ஆகிய இருவரும் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கறுப்பர் கூட்டம் இணையதள சேனலின் ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், படத் தொகுப்பாளர் குகன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதனிடையே, கறுப்பர் கூட்டம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த காட்சிப்பதிவுகள் முடக்கப்பட்டதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கறுப்பர் கூட்டம் இணைய சேனலை முடக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் சேனலை ஒட்டுமொத்தமாக யூடியூப் நிறுவனம்தான் முடக்க முடியும் என்பதாலும், அதிலுள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளால் சட்டம்ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும் எனக் கருதுவதாலும், பொதுமக்கள் யாரும் அவற்றைப் பார்க்க முடியாதபடி நீக்கப்பட்டதாக சைபர் கிரைம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிணை கோரி ’கறுப்பர் கூட்டம்’ சுரேந்தர் மனு!