சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி உருவப்படத்தையும், மெரினாவில் 75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணையும் திறந்துவைக்க தமிழ்நாடு வர அழைப்பு விடுத்திருந்தார்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் வருகை
முதலமைச்சரின் அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு வர சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீலகிரி வெலிங்டன் கல்லூரியில் நடைபெறும் விழாவிலும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத்தலைவர் தமிழ்நாட்டிற்கு வருவது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: 'கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா?'