ETV Bharat / city

அக்டோபர் 3ஆம் தேதி வெளியாகிறது அம்பறாத்தூணி

கபிலன் வைரமுத்து எழுதிய அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பு அடுத்த மாதம் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.

kapilan-vairamuthu
kapilan-vairamuthu
author img

By

Published : Sep 29, 2020, 5:29 PM IST

சென்னை : கவிஞர் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன். பாடலாசிரியர், கவிஞர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட இவர், தற்போது சிறுகதை எழுத்தாளராகவும் மாறியிருக்கிறார். 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஒன்றை எழுதியுள்ளார். அம்பறாத்தூணி எனப் பெயரிடப்பட்டுள்ள, இத்தொகுப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

தன் சிறுகதைத் தொகுப்பு குறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில், ”15 மனிதர்கள், 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு தான் அம்பறாத்தூணி. கதை மாந்தர்களைத் தேடும்போது சுவாரசியமான விஷயங்களையும் பதிவு செய்ய வேண்டும் எனத் தேடுதலை தொடங்கினேன். அதில், பல வித்தியாசமான தகவல்கள் கிடைத்தன. அவற்றைத் தான் அம்பறாத்தூணியில் பதிவு செய்துள்ளேன்.

புத்தகத்தில், 1750களில் மாமன்னர் பூலித்தேவனின் ராணுவ முகாமில் நிகழ்வது போன்ற ஒரு சிறுகதை. சங்கரன்கோவில் சன்னியில், மன்னர் தெய்வத்தை வழிபாடுவதாக ஒரு காட்சி. அவர் பாடுவதாக ஒரு பாடல் வேண்டும். அதைக் கற்பனையாக எழுதுவதை விட, பூலித்தேவர் பாடிய பாடல் ஏதேனும் உண்டா என்று ஆய்வாளர்களைத் தொடர்பு கொண்டு பல்வேறு தரவுகளில் தேடினேன். அப்படி ஒரு பாடல் கிடைத்தது. மன்னர் பாடிய அந்தப் பாடலைத் தான் சிறுகதையில் பயன்படுத்தியிருக்கிறேன்.

வேற்றுமொழி கார்டூன் தொடர்களுக்கு தமிழில் குரல் கொடுப்பவர்களுக்கான குரல் தேர்விற்கு கையாளப்படும் தேர்வு முறைகள் என்னென்ன எனத் தேடியபோது, மும்பையில் நடந்த ஒரு வினோதமான தேர்வுமுறை என்னை ஈர்த்தது. அது ஒரு சிறுகதையாகி இருக்கிறது.

கடந்த, 1876ஆம் ஆண்டு, சென்னை மாகாணப் பெரும் பஞ்சத்தை பிரிட்டிஷ் ராணுவ புகைப்படக்கலைஞர் வாலஸ் ஹூப்பர் என்பவர் புகைப்படம் எடுத்தார். அவரை மனதில் கொண்டு வில்லியம் ஹூப்பர் என்ற கதாபாத்திரத்தை ஒரு கதையில் எழுதியிருக்கிறேன்.

ஆழ்கடல் சுரங்கம் குறித்த ஒரு சிறுகதைக்காகக் கடலில் என்னென்ன எந்திரங்கள் இயங்குகின்றன என்பதை அறியவும், சர்வதேச கடல்படுகை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள மேற்கொண்ட ஆய்வு எனக்கு புதிய உலகங்களை அறிமுகம் செய்தது.

அதே போல் 1806ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சியின் பின்னணியில் நிகழும் ஒரு சிறுகதைக்கு கதைக்களத்தை நேரில் கண்டுணர வேலூரில் மூன்று நாள்கள் தங்கியிருந்ததும், கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் புதல்வியின் பெயரைக் கண்டறிந்து அதை உறுதிப்படுத்தியதும் நுட்பமானப் பயணமாக இருந்தது. இப்படி பல தேடல்கள். இந்தத் தேடல்களுக்கு எனக்கு உதவிய பேராசிரியர்களுக்கும் அறிஞர்களுக்கும் என் நன்றிகள்.

வானத்தையே அள்ளிக்கொள்ள நினைத்து மழையில் நனைய ஓடும் குழந்தை சில துளிகளை மட்டும் உள்ளங்கையில் ஏந்தி வருவது போல ஒரு சில தகவல்களை மட்டுமே கதைகளுக்குள் பயன்படுத்தியிருக்கிறேன்.

நான் உருவாக்கியிருக்கும் சில மனிதர்களுக்கு ஒரே கதைக்குள் அடங்கியிருக்கும் ஒழுக்கம் கிடையாது. ஒரு கதையில் இருப்பவர்கள் இன்னொரு கதையிலும் இருப்பார்கள்.

அனைவரும் மனதிற்குரியவர்கள், மறுவாசிப்புக்குரியவர்கள். அந்தப் பதினைந்து மனிதர்களையும் அக்டோபர் 3ஆம் நாள் உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என கபிலன் வைரமுத்து கூறினார்.

இதையும் படிங்க : திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.