சில மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டாரோடு ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அவர்களின் வாசலில் சிறுநீர் கழித்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் நிர்வாகியான டாக்டர். சண்முகம் சுப்பையா, மதுரையில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம் இது குறித்து கேட்டதற்கு, தன்னுடைய குடியிருப்பில் வசிக்கும் வயது முதிர்ந்த பெண்ணிடம் மிக கொச்சையான முறையில், அநாகரிகமாக நடந்து கொண்ட ஒருவருக்கு, எய்ம்ஸ் மருத்துவமனையில் பாஜக அரசு பதவி வழங்குகிறது என்றால் அந்த நபர் செய்த அக்காரியத்தை அக்கட்சி ஏற்றுக்கொள்கிறது என்றுதானே பொருள் என்றார்.
மேலும், இப்படிப்பட்டவருக்கு பதவி வழங்கப்பட்டதன் மூலம், தன் கட்சிக்காரர்களை பெண்களிடம் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ளத் தூண்டும் விதமாக இச்சயல் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எய்ம்ஸ் இயக்குநர் குழுவிலிருந்து சுப்பையா சண்முகம் நீக்கப்பட வேண்டும் - வைகோ