திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர். பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பிக்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு பிரச்னைகள் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கைகள் ஆகியவற்றை மனுவாக அளித்தனர்.
அதில், 'நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு வேண்டும்; முல்லைப்பெரியாறு, மேகேதாட்டு, தென்பெண்ணை போன்ற நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்; எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இதையும் படிங்க:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - மேலும் ஒருவர் கைது... தொடரும் சிபிசிஐடி விசாரணை