தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் கனிமொழி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி பாஜக வேட்பாளர் தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின், தேர்தல் வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி தமிழிசை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், கனிமொழிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கைத் திரும்பப் பெறுவது தொடர்பாகச் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டார். விளம்பரம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழிசை தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்காளரான ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
'ஈழத்தமிழர்களைப் பற்றியோ ராஜிவ் காந்தியைப் பற்றியோ பேச கனிமொழிக்குத் தகுதியில்லை...!'
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், உரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தும்படி, முத்துராமலிங்கத்துக்கு அறிவுறுத்தி, விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.