இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜ காரணம் என்ன, கரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவிடும் என்ற நடுக்கமா?
சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்று விடுமா? “ என்று பதிவிட்டுள்ளார். கரோனா பரவல் அச்சத்தால், தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்துசெய்யப்படுவதாக அரசு நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக் கூட்டம் ரத்து - தமிழ்நாடு அரசு