நடிகர் கமல் ஹாசனின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ்' இன்டர்நேஷனல், மிகுந்த பொருள்செலவில் தயாரிக்கும் பிரமாண்ட படம் விக்ரம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்றிலிருந்து தொடங்கின.
கமல்ஹாசன்- விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படத்தின் முதல் காட்சியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வசனங்களை ரத்னகுமார் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் கமலின் அரசியல் பணிகளால் படம் தாமதமானது.
இதையும் படிங்க: 'கவர்ந்திழுக்கும் இடையழகி கத்ரீனா கைஃப்!'