மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம், செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமையில் சென்னையில் அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் குறித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டது.
அவை, நடைப்பெற்ற மக்களவை, இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்கிற காரணத்தினால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் அஞ்சல் வாக்குகள் இதுவரை அனுப்பப்படவில்லையென அவர்கள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இனியும் தாமதிக்காமல் உடனடியாக சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்குகளை அனுப்புவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்திட வாக்கு ஒப்புகை சீட்டு ஒப்பிட்டுப்பார்த்தல், மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கையை துல்லியமாக பதிவு செய்வது போன்றவைகள் விதிகளுக்குட்பட்டு முறையாக நடத்துவதை தேர்தல் ஆணையம் கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி கமலஹாசன் பேசியவை தவறானவையல்ல. அதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தங்களது கருத்தினை வெளியிட உரிமை உண்டு. ஆனால் அதற்காக கமல்ஹாசனை மிரட்டுவதெல்லம் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு விரோதமானதாகும் ஆகையால் இத்தகைய போக்கினை கண்டிக்கிறோம்.என தெரிவிக்கப்பட்டது
இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.