நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கமல்ஹாசன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் சுஹாஸ் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கமல்ஹாசன் கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுவிட்டார். அடுத்த இரண்டு நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டு, பின்னர் வழக்கமான பணிகளை அவர் தொடரலாம்" என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா சென்றுவந்தப்பின் கமல்ஹாசனுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில், தனது ரசிகர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை தனக்குப் பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளதாக கூறினார்.
தற்போது கமல் குணமடைந்துள்ள நிலையில், அவர் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Kadaisi Vivasayi Movie - இசைஞானிக்கே இந்த நிலைமையா?