ETV Bharat / city

இன உணர்வு எரிமலை பெரியார்: கி.வீரமணி

சென்னை: தந்தை பெரியார் வெறும் கற்சிலையல்ல இன உணர்வு எரிமலை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி
author img

By

Published : Apr 8, 2019, 6:10 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “பா.ஜ.க.வின் கூட்டணி என்றுதான் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியினருக்கு உத்தரவு பிறப்பித்தார் பா.ஜ.க தலைவர் அமித்ஷா. மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கைகட்டி வாய்ப் பொத்தி நின்றனர் அதிமுக என்ற டெல்லியின் கொத்தடிமைகள். தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத காவி கூட்டத்தினர்!

அந்தக் கூட்டணியின் சார்பில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதியான ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலையை நேற்றிரவு உடைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத காவி கூட்டத்தினர். சிவகங்கை தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான ஹெச். ராஜா என்ற நரகல் நடையழகர் “பெரியார் சிலையை உடைப்போம்“ என்றதைத் தொடர்ந்து, (7.3.2018) திருப்பத்தூரில் பா.ஜ.கவின் பொறுப்பாளர் சம்மட்டி சகிதம் சென்று பெரியார் சிலையை உடைத்தவுடன், பொதுமக்களே பிடித்துத் தந்தனர். அதுபோலவே ஆலங்குடியில், புதுக்கோட்டை விடுதியிலும் நடந்தது (2018, மார்ச்). தந்தை பெரியார் பிறந்த நாளில் சென்னையில் பாஜகவின் வக்கீல் என்ற பேர்வழி ஒருவர் பெரியார் சிலை மீது செருப்பை வீசி, பிடிபட்டு சிறை தண்டனை பெற்றார். அதே நாளில் தாராபுரத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியார் சிலைக்கு மேல் ஷூவை வைத்து பிடிபட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் ‘தனக்கு பைத்தியம்‘ என்று சான்றிதழ் வாங்கி, வெளியே வந்து நொந்து கிடக்கிறார். ஆரியம் என்றாலும் பாஜக - ஆர்எஸ்எஸ் என்றாலும் ஒன்றுதான்!

தந்தை பெரியாரைப் பொறுத்தவரை 1971 தேர்தலில் திண்டுக்கல் போன்ற ஊர்களில் அவர் சிலையைத் தகர்க்க, படத்தை எரிக்க இதே ஆரியம் முயற்சித்தபோது தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை விட்டார். ‘‘நானே என் படத்தை அச்சிட்டு வழங்குகிறேன்; கொளுத்துங்க’’ என்று கூறி 1971 தேர்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றியைத் தேடித்தந்தவர் தந்தை பெரியார். திராவிடத் தமிழ் இனத்தை ஒன்றுதிரட்ட இத்தகைய இழிவானவர்களின் இழி செயல்கள், ‘வயல்களில் பயிர் வளர’ நல்ல உரங்களாகவே பயன்படும். அண்ணா திமுக ஆட்சி என்பது, மோடி ஆட்சியிடம் தமிழ்நாட்டை, தமிழர் நலனை, உரிமைகளை அடகு வைத்துவிட்டது; இத்தகைய ஆட்சியில் இந்தத் ‘துணிச்சல்’ வந்திருக்கிறது. ஆட்டம் போடுகிறார்கள்! குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவுகிறார்கள்.

அண்ணாவின் பெயர் அவர்களுக்கு ஒரு தேர்தல் வியாபார முத்திரையே ‘நான் கண்ட ஒரே தலைவர் பெரியார்!’ என்ற அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக்கொண்டவர்களுக்குப் பெரியார் சிலை உடைபடும்போது ஏற்படவேண்டிய உணர்வு ஏற்படவில்லை. ஒரு கண்டனம்கூடத் தெரிவிக்க இயலாத பா.ஜ.க. அடிமை ஆட்சியாக மாறிவிட்டது. திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறது; அண்ணா இவர்களுக்கு ஒரு தேர்தல் வியாபார முத்திரை. அவ்வளவுதான். தந்தை பெரியாரை அவமதித்தோர் மீது நடவடிக்கை எடுக்கும் துப்பு இல்லை. அவர்களைக் காப்பாற்றும் துரோக வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக ஆட்சியின் நிலை வெட்கக்கேடானது! தமிழக ஆட்சியின் நிலை வெட்கக்கேடானது!

இவர்களுக்குப் பாடம் கற்பிக்க சரியான ஒரே வழி - ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற - சட்டமன்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வதுதான். இன்றைய நிலையில் பெரியார் அவர்களின் அறிவுரை இதுவாகத்தான் இருக்கும். பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

---------- Forwarded message ---------
From: nelson ravikumar <nelsonravikumar@yahoo.com>
Date: Mon, Apr 8, 2019 at 1:09 PM
Subject: Fw: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
To: Prince Jebakumar <prince.flintonian@gmail.com>, Etv Edwin Prince <prince.kumar@etvbharat.com>

----- Forwarded message -----
From: Viduthalai Editorial <editorial.viduthalai@gmail.com>
To: Viduthalaidaily Viduthalai <viduthalaimalar@gmail.com>
Sent: Monday, 8 April, 2019, 1:03:36 pm IST
Subject: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி அறிக்கை

அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலை உடைப்பு - 

தொடர்ந்து இந்த வேலையில் ஈடுபடுவோரை அடையாளம் காண்பீர்!

அண்ணா பெயரில் கட்சி வைத்திருக்கும் அண்ணா தி.மு.க. அரசின் இலட்சணம் இதுதானா?

மோடி ஆட்சியிடம் அடகு வைத்துவிட்டனர்

பெரியார் சிலையை உடைக்கும் ‘‘திருப்பணிகள்’’ நடக்கட்டும்! நடக்கட்டும்!!

1971 போல் தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்!

பெரியார் வெறும் கற்சிலையில்லை - இனவுணர்வின் எரிமலை - காலிகள் புரிந்துகொள்ளட்டும்!

தி.மு.க. அணியை வெற்றி பெறச் செய்து பாடம் புகட்டுவீர்!

அண்ணா பெயரில் கட்சியை, ஆட்சியை வைத்திருக்கும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் பெரியார் சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. பா.ஜ.க.வுக்கு அடகு வைக்கப்பட்ட ஆட்சி இது.  1971 மீண்டும் திரும்புகிறது; பெரியார் வெறும் கற்சிலையல்ல; இனவுணர்வு எரிமலை என்பதை தேர்தலில் காட்டுங்கள் என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

பா.ஜ.க.வின் கூட்டணி என்று தான் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியினருக்கு உத்தரவு பிறப்பித்தார் பா.ஜ.க தலைவர் அமித்ஷா. மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கைகட்டி வாய்ப் பொத்தி நின்றனர் அதிமுக என்ற டில்லியின் கொத்தடிமைகள்.

தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத  காவி கூட்டத்தினர்!

அந்தக் கூட்டணியின் சார்பில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதியான இராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலையை நேற்றிரவு உடைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத காவி கூட்டத்தினர்.
சிவகங்கை தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான எச். ராஜா என்ற நரகல் நடையழகர் “பெரியார் சிலையை உடைப்போம்“ என்றதைத் தொடர்ந்து, (7.3.2018) திருப்பத்தூரில் பா.ஜ.கவின் பொறுப்பாளர் சம்மட்டி சகிதம் சென்று பெரியார் சிலையை உடைத்தவுடன், பொதுமக்களே பிடித்துத் தந்தனர். அதுபோலவே ஆலங்குடியில், புதுக்கோட்டை விடுதியிலும் நடந்தது (2018, மார்ச்).
தந்தை பெரியார் பிறந்த நாளில் சென்னையில் பாஜகவின் வக்கீல் என்ற பேர்வழி ஒருவர் பெரியார்சிலை மீது செருப்பை வீசி, பிடிபட்டு சிறை தண்டனை பெற்றார். அதே நாளில் தாராபுரத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியார் சிலைக்கு மேல் ஷூவை வைத்து பிடிபட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் ‘தனக்கு பைத்தியம்‘ என்று சான்றிதழ் வாங்கி, வெளியே வந்து நொந்து கிடக்கிறார்.
இரவு நேர வீராதி வீரர்கள்!
இந்த தேர்தல் நேரத்தில் இப்படி செய்வது வேறு யாராக இருக்க முடியும்? இந்த ‘‘இரவு நேர வீராதி வீரர்களைத்’’ தவிர, வேறு யார்?
தேர்தலில் தோல்வி பயம் உச்சக்கட்டத்தை அடைவதால் குழம்பிப்போய் இத்தகைய இழி செயல்களை இந்த இழி மக்கள் செய்கின்றனர்.
எல்லா ஊர்களிலும் உள்ள தந்தை பெரியார் சிலைகளையும் இதுபோல தேர்தலுக்கு முன்பே உடைத்து ‘‘திருப்பணி’’களை  ஆற்றட்டும்! ஆற்றட்டும்!!
அப்போது தான் ஏற்கெனவே நோட்டாவை விட கீழே வாக்கு வாங்கிய கும்பல் அடியோடு படுதோல்வியை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ஆரியம் என்றாலும் 
பாஜக  - ஆர்எஸ்எஸ் என்றாலும் ஒன்றுதான்!

தந்தை பெரியாரைப் பொறுத்தவரை 1971 தேர்தலில் திண்டுக்கல் போன்ற ஊர்களில் அவர் சிலையைத் தகர்க்க, படத்தை எரிக்க இதே ஆரியம் முயற்சித்தபோது (ஆரியம் என்றாலும், பாஜக  - ஆர்எஸ்எஸ் என்றாலும் ஒன்றுதான்!) தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை விட்டார். ‘‘நானே என் படத்தை அச்சிட்டு வழங்குகிறேன்; கொளுத்துங்க’’ என்று கூறி 1971 தேர்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தவர் எம் தலைவர் தந்தை பெரியார்.
திராவிடத் தமிழ் இனத்தை ஒன்று திரட்ட இத்தகைய இழிவானவர்களின் இழி செயல்கள்,  ‘வயல்களில் பயிர் வளர’ நல்ல உரங்களாகவே பயன்படும்.
அண்ணா திமுக ஆட்சி என்பது, மோடி ஆட்சியிடம் தமிழ்நாட்டை , தமிழர் நலனை, உரிமைகளை அடகு வைத்துவிட்டது; இத்தகைய ஆட்சியில் இந்தத் ‘துணிச்சல்’ வந்திருக்கிறது.. ஆட்டம் போடுகிறார்கள்! குற்றவாளிகள் சுதந்திரமாக உலவுகிறார்கள்.

அண்ணாவின் பெயர் அவர்களுக்கு 
ஒரு தேர்தல் வியாபார முத்திரையே!

‘நான் கண்ட கொண்ட ஒரே தலைவர் பெரியார்!’ என்ற அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக்கொண்டவர்களுக்குப் பெரியார் சிலை உடைபடும்போது ஏற்படவேண்டிய உணர்வு ஏற்படவில்லை - ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்க இயலாத பா.ஜ.க. அடிமை ஆட்சியாக மாறிவிட்டது; திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறது;  அண்ணா இவர்களுக்கு ஒரு தேர்தல் வியாபார முத்திரை - அவ்வளவுதான்.
தந்தை பெரியாரை அவமதித்தோர் மீது நடவடிக்கை எடுக்கும் துப்பு இல்லை. அவர்களைக் காப்பாற்றும் துரோக வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக ஆட்சியின் நிலை வெட்கக்கேடானது!

கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ்.காரர்களைக் கொண்டு வந்து இறக்கி கலவரம் செய்யத் திட்டமிடுகின்றனர் என்று காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் நேற்று கூறியுள்ளார்.
எங்கெங்கெல்லாம் பா.ஜ.க வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்களோ, அந்தந்த தொகுதிகளில் தேர்தலுக்குள் கலவரம் வெடித்தாலும் கூட அதிசயமில்லை. தமிழக ஆட்சியின் நிலை வெட்கக்கேடானது!
வாக்காளர்களான தமிழ் இனமான உணர்வாளர்களே, இவர்களுக்குப் பாடம் கற்பிக்க சரியான ஒரே வழி - ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற - சட்டமன்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வதுதான்.
இன்றைய நிலையில் தந்தை பெரியார் அவர்களின் அறிவுரை இதுவாகத்தான் இருக்கும். இருக்கவும் வேண்டும்.
பெரியார் வெறும் கற்சிலை அல்ல; 
இன உணர்வு எரிமலை!
‘எங்களுக்கு உயிர் வெல்லம் அல்ல; உயிர்த் தியாகமும் தேவை என்றால் தருவதற்குத் தயார் பெரியாரின் ராணுவம்‘ - எதிரிகள் புரிந்துகொள்ளட்டும்!
‘‘பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை’’ என்று கயவர்கள், காலிகள் புரிந்து கொள்ளட்டும்!
கி.வீரமணி
தலைவர் , திராவிடர் கழகம்
8.4.2019

--
Prince Jebakumar
9121292541

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.