சென்னை: முருகனின் மனைவி நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்துள்ள மனுவில், தனது மகள் நளினி தற்போது பரோலில் உள்ளதால், மருமகன் முருகனுக்கும் பரோல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நளினி தனது கணவரை பரோலில் விடுவிக்க மனு அளித்தும் சிறைத்துறைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது மருமகனுக்கு உடல்நலக்குறைவுடன் உள்ளதாகவும்; அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதாலும், 30 நாட்கள் பரோலில் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே ராஜிவ் கொலை வழக்கின் கீழமை நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றுள்ளதால், இந்த மனுவை தான் விசாரிப்பது முறையாக இருக்காது எனத் தெரிவித்த நீதிபதி பிரகாஷ், மனுவை வேறு அமர்வுக்கு மாற்றும்படி, தலைமை நீதிபதிக்கு பதிந்துரைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து எதுவும் தெரியாது - ஓபிஎஸ்