ETV Bharat / city

ராஜேந்திர பாலாஜியின் முன்பிணை மனு தள்ளுபடி

author img

By

Published : Dec 17, 2021, 12:36 PM IST

அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ex minister bail dismissed  3crore forgery  aavin department job  ஜாமீன் மனு தள்ளுபடி  பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  உயர் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ராஜேந்திர பாலாஜி, என். பாபுராய், வி.எஸ். பலராமன், எஸ்.கே. முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன்பிணை கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தங்களுக்கு எதிராகப் புகார் அளித்தவர்கள் மீது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளன எனவும், மேலும் தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய்ப் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுக்கள் மீது நீதிபதி நிர்மல்குமார் முன்பு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய் நல்லதம்பி என்பவர்தான் குற்றவாளி என்றும், அவரை காவல் துறை பாதுகாக்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இதில் தொடர்பில்லை, விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் என்று வாதிட்டார்.

காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரில் 23 சாட்சிகளிடம் விசாரிக்கபட்டுள்ளதாகவும், ராஜேந்திர பாலாஜிக்கு அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம்தான் இந்தப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நல்ல தம்பியும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து நவம்பர் 30ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஜெ.ஆட்சியில் அமைக்கப்பட்ட நில அபகரிப்பு பிரிவு: 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.