கடந்த ஜனவரி மற்றும் இம்மாதம் 1 முதல் 6ஆம் தேதிவரை, ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. மத்திய அரசின் கல்வி நிறவனங்களான ஐஐடி, என்ஐடி உள்ளிட்டவற்றில் சேர்வதற்கான இத்தேர்வை, 8.50 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இத்தேர்வுகளின் முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. இதில் நாடு முழுவதிலும் இருந்து 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் 100% மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், முதன்மை மதிப்பெண் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட இடம் பெறவில்லை. கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜேஇஇ தேர்வு மூலம் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு, 12ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் பெற வேண்டும் என விதிகளில் தளர்வு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஐஐடியில் சேருவதற்கான ஜேஇஇ பிரதான தேர்வு, வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜேஇஇ முதன்மைத் தேர்வில் விழுக்காடு அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 2.45 லட்சம் மாணவர்கள், இந்தத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
இதையும் படிங்க: 71 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து!