ETV Bharat / city

ஸ்டாலினை எதிர்த்துக் களம்காணும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்? - ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் களம் காணும் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப்

சென்னை: ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கொளத்தூர், வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர்.

ஸ்டாலினை எதிர்த்து களம் காணும் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப்

author img

By

Published : Mar 1, 2021, 9:41 PM IST

Updated : Mar 2, 2021, 7:11 AM IST

தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து அதிமுக விருப்ப மனு பெற்றுவருகிறது. இந்நிலையில், கொளத்தூர் அல்லது வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் போட்டியிட வேண்டுமென 20 அதிமுகவினர் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர்.

இந்நிலையில் கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளைச் சார்ந்த அதிமுகவினர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இளைய மகன் ஜெயபிரதீப் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டுமென விருப்ப மனு அளித்துள்ளனர்.

இதன்மூலம், ஓ. பன்னீர்செல்வம் இளைய மகன் ஜெயபிரதீப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் களம்காணும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இது ஓபிஎஸ் உத்தரவின் பெயரில் நடைபெற்றதா வேட்புமனு தாக்களின்போது தெரிந்துவிடும்.

Last Updated : Mar 2, 2021, 7:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.