சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிச.5ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பின்னர், அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற திட்டமிடப்பட்டது. போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை, நினைவு இல்லமாக்கும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டு, பணிகளைச் செய்து வருகின்றது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் பார்வையிட கூடிய அளவில் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க : ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்!