ETV Bharat / city

ஜெ ஜெயலலிதா என்னும் நான்...!

”ஜெ ஜெயலலிதா என்னும் நான்” என முதல்முறையாக அவர் தனது குரலை ஒலிக்கவிட்ட நாள் இன்று. ஆனால் சரியாக 28 வருடங்களுக்கு பிறகு இதேநாளில் அதிமுகவின் நிலைமை என்னவென்று அனைவரும் அறிந்ததே.

ஜெயலலிதா
author img

By

Published : Jun 24, 2019, 6:13 PM IST

அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் மறைவில் கலந்துகொள்ள வந்த ஜெயலலிதா அப்போதைய அதிமுகவினரால் கீழே தள்ளிவிடப்பட்டார். தன்னை யார் யார் கீழே தள்ளிவிட்டார்களோ அவர்களை பின்னாட்களில் தனக்கு கீழே வைத்திருந்தது எல்லாம் வரலாறு.

எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணி-ஜானகி அணி என பிரிந்து செயல்பட்ட அதிமுக பின்னர் ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு குடையின் கீழ் வந்தது. அவர் 'கட்சிப் பொதுச்செயலாளராக' பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அக்கட்சியை கட்டுப்பாட்டோடு நடத்திவந்தார். அவரைப் பொறுத்தவரை கட்சியில் யார் தவறு செய்தாலும் பாரபட்சம் காட்டாமல் கடுமை காட்ட வேண்டும் என்பதே கொள்கை.

இது இப்படி இருக்க நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்திற்கு தலமையேற்ற பின்பு அவரது அடுத்தக் குறி முதலமைச்சர் நாற்காலியை நோக்கிச் சென்றது. அவருக்கு காலம் துணை நின்றது. தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அப்போது இருந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், 1991ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. அதிமுக 168 இடங்களில் போட்டியிட்டது. அப்போது ராஜீவ் காந்தி மீதான அனுதாப அலை காங்கிரசுக்கு பலமாக வீசியதால் அக்கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிமுகவை 164 இடங்களில் வெற்றிபெற வைத்து தனது இருப்பை தமிழ்நாட்டு மக்களுக்கு ஆரவாரத்தோடு பிரகடனப்படுத்தினார் ஜெயலலிதா. திமுகவோ வெறும் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றது.

அந்தத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெல்வதற்கு ராஜீவ் கொலை மூலம் வந்த அனுதாப அலைகளே காரணம் என கூறப்பட்டாலும் அந்த அனுதாப அலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது, சரியான நேரத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்தது என ‘தான் ஒரு அரசியல் சாணக்கியர்’ என ஜெ எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்தினார்.

இந்த அபார வெற்றியை அடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜூன் 24ஆம் தேதி 1991ஆம் ஆண்டு முதல்முறையாக ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் தமிழ்நாடு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

”ஜெ ஜெயலலிதா என்னும் நான்” என முதல்முறையாக அவர் தனது குரலை ஒலிக்கவிட்ட நாள் இன்று. ஆனால் சரியாக 28 வருடங்களுக்கு பிறகு இதேநாளில் அதிமுகவின் நிலைமை என்னவென்று அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதா கட்சியை நடத்தும் போது இருந்த கட்டுப்பாடு, ஒழுக்கம், சுய கவுரவம் உள்ளிட்ட பல பல விஷயங்கள் தற்போது இல்லாதது பலரது வருத்தம்.

ஜெயலலிதாவை விமர்சித்தவர்களும், விமர்சிப்பவர்களும் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் கூத்துகளை நினைத்து, 'ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்...' என்ற வாக்கியத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வார்த்தையே அவரது வெற்றிடத்தை உணர்த்துகிறது. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஆணாதிக்க அரசியல் உலகில், அதிலும் குறிப்பாக கருணாநிதி போன்ற அரசியல் சாணக்கியன் உள்ள கோட்டைக்குள் நுழைந்து எதற்கும் அஞ்சாமல் துணிந்து அவர் எடுத்த முடிவுகள் (அது சரியோ, தவறோ) இன்றும் அவரை 'தமிழ்நாடு அரசியலின் இரும்புப் பெண்மணி' என பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.