ETV Bharat / city

ஜெயலலிதா நினைவுதினம் - ஜெ. தீபா மரியாதை

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜெ. தீபா மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

ஜெ. தீபா
ஜெ. தீபா
author img

By

Published : Dec 5, 2019, 4:53 PM IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலை முதல் வாலாஜா சாலை வழியாக ஜெயலலிதா நினைவிடம் வரை இன்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிலையில், ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா தனது கணவர் மாதவனுடன் ஜே. நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக முதலமைச்சர் பழனிசாமி தனது இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Intro:Body:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 3 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்க படுகிறது. இதை ஒட்டி ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல்வர், துணை முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடக்க உள்ளது. அண்ணா சிலை முதல் வாலாஜா ரோடு வழியாக ஜெயலிலிதா நினைவிடம் வரை நடக்குமிந்த பேரணியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

முன்னதாக முதல்வர் பழனிசாமி தனது இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா தனது கணவர் மாதவனுடன் ஜே. நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.