ETV Bharat / city

காவல்நிலையத்தில் கைதி உயிரிழப்பு - ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

author img

By

Published : Apr 25, 2022, 12:32 PM IST

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஐந்தாவது முறையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திமுக ஆட்சியில் ஆளுநர் முதல் காவலர்கள் வரை பாதுகாப்பு இல்லை. தலையே சரியில்லாத நேரத்தில் வால் எப்படி சரியாக இருக்கும் (தலை என்றால் முதலமைச்சர் ஸ்டாலின், வால் என்றால் காவல் துறையினர்).

திமுக அரசானது இந்திய அரசியலமைப்பு சட்டம் 356 நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும். அவர்கள் விசாரித்து உரிய நபர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தால் மட்டுமே லாக் அப் மரணங்களை தடுக்க முடியும். காவல் துறையினர் விசாரித்தால் அவர்களுக்கு ஆதரவாக தான் அமையும்.

திமுக அரசின் மக்கள் விரோத செயல் குறித்து அதன் தோழமை கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. இதை மக்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள்" என்றார். எடப்பாடி பழனிசாமி தனது காரை எடுத்துக்கொண்டு செல்லலாம், ஆனால் கமலாலயம் செல்ல வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்திற்கு பதிலளித்த ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் அவரது காரை எடுத்துக்கொண்டு இலங்கைக்கு செல்லுமாறும், அங்கு 1.5 லட்சம் இலங்கை தமிழர்களின் ஆவி அவரை சும்மா விடாது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "செயற்கையான மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டு, மத்திய அரசின் மீது திமுக அரசு பழி போடுகிறது. 2,113 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. பொதுமக்களை இருட்டுக்குள் தள்ளி கஷ்டபடுத்தும் இந்த பாவம் திமுகவை சும்மா விடாது" என்றார்.

இதையும் படிங்க: மனைவி கர்ப்பம்... சமையல் செய்த கணவருக்கு நேர்ந்த சோகம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.