அதிமுகவின் 49ஆவது ஆண்டு விழா ஓட்டேரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு, ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம். இந்த உள் ஒதுக்கீட்டினால் ஏழை மாணவர்கள் பயன் பெறுவர் என்பதை ஆளுநரை சந்தித்த போது, புரியும் வகையில் எடுத்துக்கூறியுள்ளோம்.
மக்கள் நலனுக்காக பல சட்டங்களை இயற்றி அதை ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளோம். திமுக ஆட்சிக் காலத்தில் அன்றைய மத்திய அரசின் மூலம், மாநில உரிமை பறிக்கப்படும் போதெல்லாம், இன்று போலவே அன்றும் மௌனமாகவே இருந்தனர்.
37 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்காக திமுகவின் ஒரு உறுப்பினராவது குரல் எழுப்பியதுண்டா? ” எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சீர்மரபினர் கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும்: எம்எல்ஏ கருணாஸ் வலியுறுத்தல்