சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், தென் பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன்பிடிப் படகு அணையும் தளம் திறப்பு விழாவும், 10.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணையும் தளம் மற்றும் மீன் விற்பனை கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ”தமிழ் மொழிக்கு பேராபத்து திமுகதான். குறிப்பாக ஸ்டாலின் குடும்பம்தான் தமிழுக்கு பேராபத்து. அதிமுக ஆட்சியில்தான் தமிழ் வளர்க்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று கூறுவதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஸ்டாலின் முதலில் அவர் பெயரை தமிழில் வைத்துள்ளாரா? முதலில் நாம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர் நடத்தும் பள்ளியின் பெயர் தமிழில் உள்ளதா, பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், நான் வேண்டுமானால் ஸ்டாலினுக்கு நல்ல தமிழ் பெயரை பரிந்துரைக்கிறேன் என்று கூறினார்.