ETV Bharat / city

3 எம்எல்ஏக்கள் விவகாரம் - என்னதான் சொல்கிறார் ஜெயக்குமார்?

மதுரை: மூன்று எம்எல்ஏக்கள் மீது எதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

jayakumar
author img

By

Published : Apr 29, 2019, 1:10 PM IST

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய மூன்று பேரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகாரளித்தார். இதனையடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் விரைவில் நோட்டீஸ் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

'அதேசமயம், இடைத்தேர்தல் நடைபெற்ற 18 தொகுதிகள் மற்றும் தேர்தல் நடக்கவுள்ள நான்கு தொகுதிகளையும் சேர்த்து 22 தொகுதிகளில் ஏழு தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, 114 எம்எல்ஏக்களுடன் சேர்த்தால், அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 121ஆக உயரும்.

ஆனாலும், அதிமுக எம்எல்ஏக்களான, ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் டிடிவிக்கு ஆதரவாக இருக்கின்றனர். இருப்பினும், இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்று எம்எல்ஏவான தமிமுன் அன்சாரி அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார். கருணாஸின் நிலைப்பாடு என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. எனவே இந்த ஐந்து பேர் நீங்கலாக, அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116ஆக இருக்கும்.

அதனால் ஐந்து பேரையும் தகுதிநீக்கம் செய்து, சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 229ஆக ஆக்கும்பட்சத்தில் 115 உறுப்பினர்கள் இருந்தாலே பெரும்பான்மையை பிடித்துவிடலாம். இதனால் அவர்கள் ஐந்து பேரையும் உடனடியாக தகுதி நீக்கம் செய்வதற்கான வேலைகளை முதலமைச்சர் முடுக்கிவிட்டுள்ளார்' என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் தற்போது மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதன் மூலம் கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரியை வழிக்கு கொண்டுவரலாம் என எண்ணிதான், அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட இருக்கிறது. அதனால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவே மூன்று எம்எல்ஏக்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் உட்பட பலர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”மூன்று எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை என்பது நிர்பந்தங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல. உரிய ஆதாரங்களின் அடிப்படையிலேயே தலைமைக் கொறடா நடவடிக்கை எடுத்திருக்கிறார்” என்றார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.