ETV Bharat / city

பக்தரின் தங்கத்தாலான பூஜை சாமான்களை திருடிய கோயில் பூசாரி கைது!

author img

By

Published : Jul 17, 2022, 10:34 PM IST

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெயின் கோயிலில், பக்தரின் தங்கத்தாலான பூஜை சாமான்களை திருடிய கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர்.

Jain
Jain

சென்னை: கீழ்பாக்கத்தைச் சேர்ந்த மீனா சாக்கிரியா (54), தினமும் அதே பகுதியில் உள்ள ஜெயின் கோயிலுக்கு சென்று, தங்கத்தால் ஆன பூஜை சாமான்கள் வைத்து பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி வழக்கம் போல் கோயிலுக்கு சென்ற மீனா, தங்கத்தாலான பூஜை சாமான்களை கருவூலத்தின் வெளியே வைத்துவிட்டு உள்ளே சென்று வழிபாடு செய்துள்ளார்.

அப்போது வெளியில் இருந்த தங்கத்தால் ஆன பூஜை சாமான்கள் திருடு போய்விட்டது. இதுதொடர்பாக மீனா போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தங்கத்தாலான பூஜை சாமான்களை திருடிச் சென்றது, கோயிலில் பூசாரியாக வேலை செய்து வந்த விஜய் மோதிலால் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில், விஜய் மோதிலால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தனது சொந்த ஊரான குஜராத்துக்கு தப்பிச் செல்வதாக தகவல் கிடைத்தது. உடனடியாக கோயம்பேடு சென்ற போலீசார், விஜய் மோதிலாலை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தங்கத்தாலான பூஜை சாமான்கள்
தங்கத்தாலான பூஜை சாமான்கள்

அவரிடம் விசாரணை நடத்தியதில், தனது நண்பர் மகேந்திரனுடன் சேர்ந்து பல நாட்களாக திட்டம் தீட்டி, தங்கத்தாலான பூஜை சாமான்களை திருடியதை ஒப்புக் கொண்டார். திருடிய தங்க பூஜை சாமான்களை கர்நாடகாவில் உள்ள மகேந்திரனிடம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் கர்நாடகா சென்ற போலீசார் மகேந்திரன் அடகு கடையில் விற்பனை செய்த 46 சவரன் மதிப்புடைய தங்க பூஜை சாமான்களையும், 350 கிராம் வெள்ளி பொருட்களையும் மீட்டனர். விஜய் மோதிலாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள மகேந்திரனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் மாயம் - 2 பேர் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.