ETV Bharat / city

காவல்துறையை கண்டித்து உண்ணாவிரதம் ஜெய் பீம் பட ராஜாகண்ணுவின் சகோதரி மகன் - Jai Bhim contraversy

ஜெய்பீம் திரைப்பட உரிமை தொகை தொடர்பான விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யாத காவல்துறையை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ராஜாகண்ணுவின் சகோதரி மகன் கொளஞ்சியப்பன் தெரிவித்துள்ளார்

காவல்துறையை கண்டித்து உண்ணாவிரதம் ஜெய் பீம் பட ராஜாகண்ணுவின் சகோதரி மகன்

author img

By

Published : Aug 13, 2022, 8:02 AM IST

சென்னை: பிரபல திரைப்பட நடிகர் சூர்யா தயாரித்து நடித்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ’ஜெய் பீம்’. முன்னதாகவே பல சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் உண்மை கதாப்பாத்திரமான ராஜாகண்ணுவின் சகோதரி மகன் கொளஞ்சியப்பன் என்பவர் காவல்துறையினரை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விருதுகளை குவித்தது. இத்திரைப்படத்தின் உண்மை கதாப்பாத்திரமான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் உண்மை கதாப்பாத்திரமான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் மற்றொரு உண்மை கதாப்பாத்திரமும், ராஜாகண்ணுவின் சகோதரி மகனுமான கொளஞ்சியப்பன் என்பவர் தனக்கும், தனது குடும்பத்திற்கும் நடந்த உண்மைச் சம்பவங்களை திரைப்படத்தில் காட்டியதற்காக தங்களுக்கு உரிமைத் தொகை வழங்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

காவல்துறையை கண்டித்து உண்ணாவிரதம் ஜெய் பீம் பட ராஜாகண்ணுவின் சகோதரி மகன்

வரும் 26-ஆம் தேதிக்குள் சாஸ்திரி நகர் காவல்துறையினர் மனுதாரர் சுட்டிக்காட்டிய சூர்யாவின் 2D நிறுவனம் உட்பட சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் சம்மந்தப்பட்ட சாஸ்த்ரி நகர் காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அம்பேத்கர் மணிமண்டபம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கான அனுமதி கோரி கொளஞ்சியப்பன் தனது வழக்கறிஞருடன் நேற்று (ஆக.12) காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். ஆனால், கொளஞ்சியப்பன் லுங்கி அணிந்து வந்ததால் பாதுகாப்புப் பிரிவு காவல் துறையினரால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

லுங்கி அணிந்து வரும் சாமானிய மக்களை அனுமதிக்க கூடாது என சட்டம் உள்ளதா என்ற அவரது வழக்கறிஞர் கேள்விக்கும், இது அதிகாரிகள் உத்தரவு என்ற மழுப்பலான பதிலே எதிரொலித்தது. மாற்று உடை இல்லாததால் அருகில் இருந்த துணிக்கடையில் வேஷ்டி ஒன்றை வாங்கி உடுத்திய பின்னர் கொளஞ்சியப்பனை உள்ளே செல்ல காவலர்கள் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர், “ஜெய்பீம் திரைப்படத்தில் கொளஞ்சிப்பனின் கதாப்பாத்திரத்தை எடுப்பதற்காக முண்பணமாக 1 கோடி ரூபாய் தருவதாகவும், பட லாபத்தில் 20% தருவதாகவும் இயக்குநர் ஞானவேல் தெரிவித்தார். ஆனால் படம் வெளியாகி பல மாதங்களாகியும் கொளஞ்சிப்பனுக்கான உரிமை தொகையை தராமல் உள்ளனர்.

கொளஞ்சியப்பனின் உறவினர் உட்பட சொந்த குடும்பத்தினரின் கதையை எடுத்துவிட்டு, உரிமைக்கான தொகை வழங்காமல் இருக்கக்கூடிய 2டி நிறுவனம், இயக்குநர் ஞானவேல், அமேசான் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் அவரால் முடிந்த லுங்கியை கட்டிக்கொண்டு வந்ததார். ஆனால் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது வேதனை அளிக்கிறது, சாமானிய மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் ஆபாசம் இல்லாத லுங்கி போன்ற உடையுடன் வந்தால் அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: லுங்கியுடன் புகார் அளிக்க வந்தவரை திருப்பி அனுப்பிய போலீசார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.