சென்னை: சபாநாயகர் நடுநிலை இல்லாமல் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது என்று இன்று (ஏப்.27) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.
அதிமுக உறுப்பினர்களை சட்டப்பேரவையில் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக இன்று வெளிநடப்பு செய்த பின் செல்வபெருந்தகை தேவையில்லாத கருத்தை சபையில் பதிவு செய்துள்ளார்.
திமுக தூண்டுதல் பேரில் செல்வப்பெருந்தகை தொடர்ந்து பேசி வருவதாக சந்தேகம் வருகிறது. முன்னாள் முதலமைச்சர் பெயரை வேண்டுமென்றே செல்வப்பெருந்தகைக் கூறி வருகிறார்.
சட்டசபையில் இதற்கு முன்பு என்னென்ன சம்பவம் நடந்தது என்பதெல்லாம் மக்களுக்கு தெரியும். இப்போது நாங்கள் நாட்டு மக்கள் பிரச்சினையைக் கொண்டு வந்து பேசுகிறோம். இருப்பினும், சபாநாயகர் நடுநிலை இல்லாமல் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது' என்றார்.
இதையும் படிங்க: 'சாமானியர்களை அலைக்கழிக்கும் போக்கை அரசு அதிகாரிகள் நிறுத்தி கொள்ளவேண்டும்' - சபாநாயகர் அப்பாவு