சென்னை: நிவர் புயல் கரையைக் கடந்து பலமணி நேரங்களாகியும், அது கொண்டு வந்த மழையின் தாக்கம் இன்னும் தீர்ந்தபாடில்லை. சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கி வரும், தி.நகர் பசுல்லா சாலையில், மழை நீர் வடிய வழியில்லாமல், சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது.
சென்னையில் அனைத்து சாலைகளிலும் மழைநீர் செல்வதற்கென தனியாக வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வடிநீர் வாய்க்கால்களை பருவ மழைக்கு முன்னர் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்ததாக கூறிவருகின்றது.
மாநகராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்றாலும், அனைத்தும் முறையாக செய்யப்படாததால் ஒவ்வொரு பருவ மழை காலத்திலும், சென்னையின் சாலைகளில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கும் சென்னை மாநகர சாலைகளில், நிவர் புயல் தந்த தீராத மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழைநீர் வடிகால்களுக்கு தண்ணீர் செல்லும் குழாய்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் தேங்கிய வாகன ஓட்டிகள் தேங்கிய தண்ணீரில்வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.
இதையும் படிங்க: மின் இணைப்பு மாலைக்குள் வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி பிரத்யேக பேட்டி