ETV Bharat / city

சரவணா ஸ்டோர்ஸ் வருமான வரித்துறை சோதனை: முடிவுக்கு வந்த 4 நாள் ஐடி ரெய்டு! - income tax raid

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.

சரவணா ஸ்டோர்ஸ்
சரவணா ஸ்டோர்ஸ்
author img

By

Published : Dec 5, 2021, 8:34 PM IST

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான கடைகளில் வரி ஏய்ப்பு செய்ததாகவும், வருமானத்தைக் குறைத்து காட்டியதாகவும் புகார் வந்ததையடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கடந்த 1ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அலுவலர்கள் சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 12க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்த சோதனையானது நேற்று நள்ளிரவோடு நிறைவடைந்தது. புரசைவாக்கம் பகுதியில் சூப்பர் சரவணா ஸ்டோருக்கு சொந்தமான 3 இடங்கள் மற்றும் தி.நகரில் 3 இடங்களில் முடிவடைந்தது. மற்ற இடங்களில் சோதனையானது தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்தச் சோதனையின்போது கைப்பற்றப்பட்டவைகள் என்னென்ன என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அது தொடர்பாக பின்னர் தெரிவிக்கப்படும் என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சோதனை நிறைவடைந்த இடங்களில் அதிக அளவு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதன் மூலம் வந்த பணத்தினை தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: போக்சோ வழக்கில் கைதான அமமுக பிரமுகருக்குப் பிணை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.