ETV Bharat / city

சீரழிக்கப்படும் சென்னையின் அடையாளம்: பாதுகாக்கப்படுமா பள்ளிக்கரணை சதுப்புநிலம்!

வயதேறி வற்றிப்போயிருந்தாலும் குழந்தையின் வேதனைக்கு பாசம் சுரக்கும் தாய் உள்ளம் போல, சின்னாபின்னமாக்கி, சீரழிக்கப்பட்ட பின்பும் சென்னை மக்களுக்கான தன் கடமையில் சிறிதும் தவறுவதில்லை பள்ளிக்கரணை சதுப்பு நிலம். அரசும் தனியார் நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு சுரண்டித் தின்றது போக, மிஞ்சியிப்பதையாவது காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சென்னை. இந்தக் குரல் சமீபகாலமாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அப்படிச் செய்தால்தான், வருங்காலத் தலைமுறையினர், சென்னையைச் சிங்காரச் சென்னையாக கொண்டாட முடியும்...

சீரழிக்கப்படும்  சென்னையின் அடையாளம்
சீரழிக்கப்படும் சென்னையின் அடையாளம்
author img

By

Published : Dec 23, 2020, 5:10 PM IST

சென்னை: கடந்த 55 ஆண்டுகளில், 6 ஆயிரம் ஹெக்டேர் பெருநிலத்தை 600 ஹெக்டேராக தின்றுத் தீர்க்க முடியுமா என்றால், முடியும் என்று நிருபித்து வருகிறார்கள் சென்னையில் வசிக்க வந்தவர்கள். வளர்ச்சி என்று பெயரிட்டு, விளையாட்டாக செய்வது போல், 10 விழுக்காட்டிற்கும் அதிகமான பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை களவாடியிருக்கிறார்கள், வசதிக்காக வளர்ச்சியை விரும்பும் சென்னைவாசிகள். சென்னைக்கும் வங்கக்கடலுக்கும் இடையில் நீர்கோர்த்து கிடக்கிற அந்த ஈரநிலம், தன் இறுதி மூச்சை இழுத்துப்பிடித்துக் கொண்டு கிடக்கிறது.

நீராகவும் இல்லாமல், நிலமாகவும் இல்லாமல் ஒரு பல்லுயிர் சூழலை தன்னுள் கொண்டிருக்கும் சேறுபூத்துக் கிடக்கும் ஈரநிலம்தான் சதுப்பு நிலம். ஒரு காலத்தில் மத்திய கைலாஷிலிருந்து விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், இன்று பெருங்குடிக்கு பக்கத்தில் எனச் சுருங்கி கிடக்கிறது. எப்போதும் சேறு பூத்துக்கிடக்கும் சதுப்பு நிலங்கள், செயல் தன்மையில் ஒரு நீர்ப்பிடிப்பு பகுதியைப் போலவே செயல்படுகின்றன. நிலத்தடிநீர் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சதுப்பு நிலங்கள் தேவைக்குப் போக உள்ள உபரி நீரை மட்டுமே கடலுக்கு அனுப்புகின்றன.

பருவ காலமாற்றங்களுக்கேற்ப நீர் இருப்பு, குறைவான ஆழம், தேவையான உணவு உற்பத்தி என பல்லுயிர் சூழலுக்கு ஏற்ற தகவமைப்பில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு காட்டில், 178 வகையான பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையான பாம்புகள், 10 வகையான பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 7 வகையான ரோட்டிஃபெரா, 10 வகையான பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 14 வகையான புரோட்டோசோவாக்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என விலங்குகள் தாவரங்கள் என, 625க்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்கின்றன. பல பறவைகள் வலசை வந்து போகின்றன.

இத்தனை பெரிய பல் உயிர்ச்சூழலை இயற்கையின் கண்ணோட்டத்துடன் அணுகாமல் தமிழ்நாடு அரசு ஒரு பொறியாளர் கண்ணோட்டத்தோடு அணுகுவதாக வேதனை தெரிவிக்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ டாமின், " அரசின் வளர்ச்சித் திட்டங்கள், தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி குடிருப்புகள் ஆகியவைகளின் ஆக்கரமிப்புகளால், 10 மடங்கு சுருங்கி விட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அரசு இன்னமும் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர் நிலையைப் போலவே பாவிக்கிறது. தென் சென்னையின் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட முதலமைச்சர், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தூர்வாரப்படும் எனத் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது. இயற்கையாக உருவான இந்த சதுப்பு நிலத்தை ஆழப்படுத்துவது, தூர்வாருவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ராம்சார் பகுதியாக அறிவிக்க தகுதியுள்ள பள்ளிக்கரணை பகுதியை பாதுகாக்க, எஞ்சியிருக்கும் பகுதிகள் முழுமையாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்கிறார்.

சீரழிக்கப்படும் சென்னையின் அடையாளம்: பாதுகாக்கப்படுமா பள்ளிக்கரணை சதுப்புநிலம்

பள்ளிக்கரணையின் ஒரு சில பகுதிகள் வனத்துறையிடம் இருந்தாலும், சென்னை மாநகராட்சியும் பொதுப்பணித்துறையும் சதுப்புநிலத்தைப் பயன்படுத்தி வருகின்றன. மாநகராட்சி, 75 ஹெக்டேர் பரப்பளவில் குப்பைக் கிடங்கை ஏற்படுத்தி, நாளொன்றுக்கு, 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளைக் கொட்டியும், அதைத் தீ வைத்துக் கொளுத்தியும், பல்லுயிர் சூழலைப் பாழ்படுத்தி வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் வசிக்கவரும் பறவைகள், உயிரினங்களுடன் அருகாமையில் வசிக்கும் மனிதர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

வருடம் முழுவதும் தண்ணீர், உணவினை வைத்துக் கொண்டு வலசை பறவைகளின் சொர்க்கமாக திகழ்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். அரசின் அலட்சியம், தொடர் ஆக்கிரமிப்புகளால், இந்த வாழ்விடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றது என்கிறார், பறவை ஆர்வலர், அருண் தட்சன்.

தொடர்ந்து பேசிய அவர், " இந்த சதுப்பு நிலத்தில், 105 உள்நாட்டுப் பறவைகள், 60க்கும் அதிகமான வெளிநாட்டுப்பறவை இனங்கள் உள்ளன. மத்திய ஆசியா பகுதியிலிருந்து, வலசை செல்லும் பறவைகள் தங்கிச் செல்கின்றன. இந்த உயிர்ச் சூழலை பாதுகாக்க, இந்த சதுப்பு நிலத்தை நாம் அப்படியே பராமரிக்க வேண்டும். நிலத்தடி நீரை உயர்த்தவும் சதுப்பு நிலங்கள் உதவியாக இருப்பதால், இங்கு குப்பைகளைக் கொட்டுவதை நிறுத்தி, சதுப்பு நிலத்தை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்" என்றார்.

எண்ணற்ற தாவர, விலங்கினங்களின் வாழ்விற்காக நீரையும், இன்னபிற வளங்களையும் வழங்கும் உயிரியல் பல்வகைமையின் தொட்டிலாக விளங்கும் சதுப்பு நிலங்கள் அல்லது ஈர நிலங்களின் தன்மையை தொடர்ந்து தக்க வைப்பதற்கும், அதன் நீடித்த பயன்பாட்டினை உறுதி செய்வதற்கும், உருவாக்கப்பட்டதே ராம்சார் ஒப்பந்தம். இந்திய அரசாங்கமும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. தென் சென்னையின் வளத்திற்கு காரணமான பள்ளிக்கரணை சதுப்புநிலம் ராம்சார் பகுதியாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

பெருநகரப் பரப்புக்குள் சிக்கித் தவிக்கும் இந்த ஈரநிலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு அப்படியே தரப்படவேண்டும் என்ற இயற்கை ஆர்வலர்களின் குரலுக்கு வலுசேர்க்க வேண்டியது நம் கடமை. தவறும் பட்சத்தில் இயற்கை அதன் கடமையைச் செய்யும்.

இதையும் படிங்க: அண்ணனின் நினைவாக குறுங்காட்டை உருவாக்கிவரும் வேலூர் மாவட்ட இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.