ETV Bharat / city

ஐஜி உள்பட 12 காவல் உயரலுவலர்கள் பணியிடமாற்றம்!

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டு ஐஜிக்கள் உள்பட 12 காவல் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ips transfer order in tamilnadu
ips transfer order in tamilnadu
author img

By

Published : Jul 28, 2021, 6:07 AM IST

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 10 ஐபிஎஸ் அலுவலர்கள் உள்பட 12 பேரை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.

குறிப்பாக ஊர்க்காவல் படை ஐஜியாக சுமித்சரண், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக தினகரன், காவல்துறை பயிற்சி பிரிவு டிஐஜியாக கயல்விழி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சீனிவாசன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரவுளி பிரியா, ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் சஞ்சய், தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு-2 காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா, சைபர் கிரைம் பிரிவு 3ஆம் காவல் கண்காணிப்பாளராக தேவராணி, சிபிசிஐடி சிறப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக விக்ரமன், பரங்கி மலை துணை ஆணையராக அருண் பாலகோபாலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயத் தோட்டத்தில் 30 குட்டிகளுடன் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு - வனத்துறை மீட்பு

மேலும், முக்கிய பொறுப்பாக கருதப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு சென்னை காவல் துணை ஆணையராக சியாமளா தேவியை அரசு நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.