திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலர் சந்தோஷ் பாபு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில், "குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் இந்தாண்டு தீபாவளி மிகவும் மனவேதனையில் நிறைவடைந்தது.
அந்த இரண்டு வயது குழந்தையின் மரணம் அனைவரின் அலட்சியத்தால் நிகழ்ந்த ஓர் துயர சம்பவம். தமிழ்நாட்டில் மற்றொரு உயிர் போவதற்கு நாம் காரணமாக இருக்கக்கூடாது. இதுவே கடைசி உயிரிழப்பாக இருக்கட்டும்.
ஆகையால் ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் அதிநவீன தொழில்நுட்பக் கருவியை தனிநபரோ அல்லது ஒரு நிறுவனமோ கண்டுபிடித்தால் ரூ. 5 லட்சம் பரிசாக அளிக்கப்படும்" என்றார்.
மேலும் படிக்க: 'சுஜித் இறப்பு ஒரு பாடம்' - நடிகர் விமல் வேதனை
மேலும் பார்க்க: சுஜித் மீட்புப் பணிகள்: விஜய பாஸ்கரை பாராட்டிய பொன்னார்!