ETV Bharat / city

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் புதிய முறை அறிமுகம் - தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன்

தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டு முதல் பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வில் புதிய முறை அறிமுகம் செய்யப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கை
author img

By

Published : Aug 1, 2022, 1:32 PM IST

Updated : Aug 1, 2022, 2:04 PM IST

சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 20 முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை பெறப்பட்டன. பொறியியல் படிப்பில் சேருவதற்கு 2 லட்சத்து 11 ஆயிரத்து 95 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து இருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 79 மாணவர்கள் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தி உள்ளனர்.

இவர்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 12 இடங்கள் மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களில் உள்ள 488 இடங்கள் உட்பட 500 இடங்களில் விளையாட்டு வீரர்கள் சேருவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆக.1 (இன்று) முதல் 8ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. விளையாட்டு பிரிவில் சேர்வதற்கு சிபிஎஸ்இ மாணவர்கள் உட்பட 3093 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 500 இடங்களில் விளையாட்டு வீரர்கள் சேருவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு

இந்நிலையில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் கூறியதாவது, ’பொறியியல் படிப்பில் சேருவதற்கு 2லட்சத்து 11 ஆயிரத்து 95 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து இருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 79 மாணவர்கள் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தியுள்ளனர். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று ஆக.1 முதல் வரும் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பொறியில் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

அதன் பின்னர் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். பொறியியல் படிப்பில் நடப்பாண்டு முதல் புதிய முறை அறிமுகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்த பின்னர் ஏழு நாட்கள் கல்லூரியில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்படும். இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத மாணவர்களின் இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்று கலந்தாய்வில் அந்த இடங்கள் காண்பிக்கப்படும்.

அதேபோல், கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்த மாணவர்கள்; இந்த இடம் தனக்கு தேவை எனவும் அடுத்த சுற்றில் தான் கலந்துகொண்டு வேறு இடத்தை தேர்வு செய்ய விரும்புவதாக( Upborad Movement) தெரிவிக்கும் மாணவர்கள் தகவல் உதவி மையங்களில் சென்று அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி இடத்தை உறுதி செய்ய வேண்டும். இதனால் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் அதற்கு பின்னர் சேராமல் இருப்பதால் ஏற்படும் காலியிடங்கள் குறையும்' என தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்கள் சேருவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு

இதையும் படிங்க: மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

Last Updated : Aug 1, 2022, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.