ETV Bharat / city

பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் முறுக்கு... ஆவினில் 10 புதிய பால் பொருட்கள்... அறிமுகம் செய்தார் அமைச்சர் நாசர்

ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம் உள்பட இதர விளம்பரமங்கள் இடம் பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஆவினில் 10 புதிய பால் பொருட்களை அறிமுகம்

author img

By

Published : Aug 19, 2022, 10:19 PM IST

தனியார் பால் விலை ஏற்றத்தின் மூலம் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆவினில் 10 புதிய பொருட்களை சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகப்படுத்தினார்.

1. பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream) 125மி.லி - 45 ரூபாய்

2. வெள்ளை சாக்லேட் (White Chocolate ) - 45 கிராம் - ரூ.30

3. குளிர்ந்த காஃபி (Cold Coffee) - 200 மி.லி - ரூ.35

4. வெண்ணெய் கட்டி (Butter Chiplets) - 200 கிராம் - ரூ.130

5. பாஸந்தி (Basundi) - 100 மி.லி - ரூ.60

6. ஆவின் ஹெல்த் மிக்ஸ் (Aavin Health Mix) - 250 கிராம் - ரூ.120

7. பாலாடைக்கட்டி (Processed Cheese ) - 200 கிராம் - ரூ.140

8. அடுமனை யோகர்ட் (Baked Yoghurt) - 100 கிராம் - ரூ.50

9. ஆவின் பால் பிஸ்கட் (Aavin Milk Biscuit) -75 கிராம் - ரூ.12

10.ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku ) - 200 கிராம் - ரூ.80

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நாசர் பேசுகையில், 'கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 36 அறிவிப்புகளில் 20 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அறிவிப்புகளில் ஒன்றான புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதத்திற்கு 2 கோடி ரூபாய் லாபத்தை எதிர்பார்க்கிறோம்.

மேலும், ஆவின் குடிநீருக்கு முதலமைச்சர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இதுகுறித்து முதலமைச்சர் அறிவிப்பார். புதிய பொருட்கள் தயாரிப்பதன் மூலம் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டரிலிருந்து 41 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. பால் விலையைக்குறைத்ததன் மூலம் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது’ எனத் தெரிவித்தார்.

பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் முறுக்கு... ஆவினில் 10 புதிய பால் பொருட்கள்... அறிமுகம் செய்தார் அமைச்சர் நாசர்

தொடர்ந்து பேசிய அவர், ’ஆயுத பூஜை இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் விற்பனையும் விரைவில் தொடங்கி வைக்கப்படும்.

தனியார் பால் விலை ஏற்றத்தின் மூலம் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளது. பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம் உள்பட இதர விளம்பரங்கள் இடம் பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

சென்னையில் ஆவின் பாலை அதிகமாக விற்ற 13 கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. பால் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அலுவலரை நியமிக்க கல்வியாளர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.